குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, November 4, 2011

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஒட்டகப் பால்


அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒருவகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது. விஞ்ஞானிகள் எலிக்கு புற்றுநோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாதகாலமாக எலிக்கு செலுத்தி வந்தனர். எலியின் உடலில் இருந்த புற்றுநோய்க் கலங்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய கலங்கள் உருவாகின. இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது புற்றுநோய் கலங்களை அழித்துவிட்டு புதிய கலங்களை உருவாக்குகிறது. இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment