குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

கவிதைகள்

எனது கவிதைகளின் பக்கம்

ஏழைகளுக்கு இது திருவிழாக் காலம்

அடி பட்டு
உதை பட்டு   உன் தேர்தல்
கூட்டத்துக்கு வந்து
ஓரமாக நின்று 
உனக்காக கைதட்டுவது
 உன் வெற்றியை 
விரும்பியல்ல தலைவா!

தலைவர் கூட்டத்துக்கு வந்து
கை தட்டினால் தலைக்கு
ஒரு வடையும் 
ஒரு கோப்பை தேநீரும்
கிடைக்கும் என்றார்கள்...
அதற்காகத் தான்...

ஏழைகள் நமக்கு
இது தான் 
திரு விழாக்காலம்
தலைவரே வந்து 
வணக்கம் சொல்லி 
வடையும் தேநீரும் 
கையிலேயே தருகிறார்

நன்றி தலைவா!
உன் சேவைக்கல்ல
நீ தந்த வடைக்கும்
தேநீருக்கும்....

 ................................................................................................................................

கனவு கலைந்தபோது

மாடி வீடு கட்டி
மற்றவர் பிரமிக்க
உயரத்தில் நின்று
காசுக்கு பஞ்சமின்றி
காற்றில் பறந்து
கடலில் மிதந்து
கரையில் ஊர்ந்த
பயணங்கள் குறைவில்லை

பசி தெரியாமல்
ருசிக்காக தினம் புசித்து
ஏ.சி.ரூமுக்குள் 
சோபா மேல் கால் போட்டு
வர்ணத் திரையில்
படம் பார்க்கின்றாள்

எங்கிருந்தோ வந்த
மழைத் துளிகள்
நெற்றியில் குத்த
கனவு கலைந்து 
பாதையோரத்துப் பெட்டிக் கடையில் 
ஒடிப் போய் ஒதுங்குகிறாள்

தனது பாத்திரத்தையும்
சில்லறைக் காசு சிணுங்கும் 
சின்னப் பையையும் 
எடுத்துக் கொண்டு....

தினக்குரல் நிறப்பிரிகையில் 2012.08.30 அன்று பிரசுரமான எனது கவிதை...

 ................................................................................................................................

இன்னும் தீராத அகதி அவலம்

உல்லாசமாய் வாழ்ந்த

உன்னதமான அந்த
நாட்களின்
நினைவுகள் நித்தம்
நெஞ்சை நிதானமின்றி
சருகாக்கியது

அப்பாவி ஜனங்களின் 
புரியாத சோகங்கள்  தினம்
அகதி முகாம்களில் 
அவல கீதங்களாய் 
செவியோரம் ஒழிக்கின்றன

அழுக்குப் படிந்த வேட்டியை 
ஆறாவது நாளும்
களற்றாமல் போட்டிருப்பது கண்டு
சில சீமான்கள் 
மனமுருகித் தந்த அன்பளிப்புகள்
பிரமாதம்

ஒட்டுப் போட்ட 
ஊத்தைச் சட்டையும்
ஒன்றுக்கும் உதவாத 
இத்துப் போன சல்வாரும்

 ................................................................................................................................

வெற்றியை நோக்கி

இன்பமான நாட்கள்
இதமான பொழுதுகள்
அத்தனையும் எம்மை
கடந்து சென்றுவிட்டன

இயற்கையை
இன்பமாய் ரசிக்காதவன்
பாவியாகட்டும்

இருப்பதைக் கொண்டு
புதியன இயற்றாதவன்
மடிந்து போகட்டும்

கால தேவனின் வேகத்தை
மிஞ்சி ஓடுது உலகம்
கனாக்களைவிட்டு
கண் விழிப்போம்

மடமையில் மூழ்கி
மண்ணாய்ப் போன நாட்கள்
மக்கிப் போகட்டும் - நம்
மண்ணைவிட்டும்

இத்துப் போன நினைவுகள்
இடம் தெரியாது போகட்டும்
இனிவரும் நாட்கள்
இனிமையாய் அமையட்டும்

வெயிலுக்கு அஞ்சி
வீட்டுக்குள் முட'ங்கியது நேற்று
வெயிலையும் அடக்கி - வீட்டுக்குள்
விளக்கெரிப்பது இன்று

வீதியில் நாமும்
விளையாடப் பயந்தது நேற்று
விண்ணிலும் போய்
வீடு கட்டுகிறோம் இன்று

அச்சங்கள் விரண்டோடட்டும் - நித்தம்
இநுராகங்கள் இசைக்கப்படட்டும்

வீணாய்ப் போன
வினாழ முள்ளின் கதறல்கள் - இனி
எம்மை ஆசிர்வதிக்கும்
இன்ப ராகங்களாய் அமையட்டும்

நம்மை வரவேற்கும்
புது உதயங்களில்
புதுமை படைப்பதற்காய் - நம்மை
தயார் படுத்துவோம்

 ................................................................................................................................

  • கனாக் கண்டேன்
    பட்டப் படிப்பு படிக்க....

    கால் நனைத்து
    ஏ.எல் படித்தேன்........ 

    கனவு நனவானது
    பல்கலைக் கழகம் வந்தேன்......

    நான் இன்னும் படிக்கிறேன்
    நான்காவது பெயிலான - என்
    தோழன்
    தொழிலில் இருக்கிறான்
    பஹமுன அஸாம்
     
 ................................................................................................................................

  • காதல் வந்தாலும் சரி.....
    வாந்தி வந்தாலும் சரி.....
    உடனே துப்பி விடுங்கள்....

    இல்லையேல்
    பின்னர் அசிங்கப் படுவீர்............
          பஹமுன அஸாம்

 ................................................................................................................................

  • கண்ணில் தூசி விழுந்தாலும்......
    காலில் முள் குத்தினாலும்....
    கஷ்டப் படுவது உடல் தான்....
    பஹமுன அஸாம்   
 ................................................................................................................................