குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, November 4, 2011

உலகின் பலம்வாய்ந்தவர்கள் பட்டியல்

2011ஆம் ஆண்டில் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனப் பிரதமர் ஹ¥ ஜிந்தாவோ, ரஷ்யப் பிரதமர் விலாடிமீர் புட்டீன் ஆகியோரைப் பின்தள்ளி அமெரிக்க ஜனாதிபதி இப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் உலகில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலின் 11வது இடத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பிடித்திருப்பதுடன், 19வது இடத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிடித்துள்ளார்.
அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோர் கொல்லப்பட்டதன் பின்னர் ஒபாமாவுக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகவும் சக்தி மிக்க பெண்மணிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த ஜேர்மனின் தலைவர் அஞ்செலா மேர்கல் சக்தி மிக்க தலைவர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரஷ்யாவின் பிரதமர் விலாடிமிர் புட்டின் காணப்படுவதுடன், மூன்றாவது இடத்தில் சீனப் பிரதமர் ஜிந்தாவோ காணப்படுகிறார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில்கேட்ஸ் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பேஸ்புக் எனும் சமூக வலைப்பின்னலின் தலைவரான மார்க் சக்கபேர்க் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment