குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Sunday, January 29, 2012

யாப்பு விதிகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது


இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

அதிபர் சேவைக்கான யாப்பு விதிகளை அரசாங்கம் மீறிச் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று
தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவ்வாறு மீறும் சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை
மேற்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டோமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் சேவைக்கான உள்ளீர்ப்புப் பரீட்சையில் தகுதியானவர்கள் உள்ளீர்க்கப்படவில்லையெனத்
தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதிபர் சேவை
ஐஐஐஇல் பாதிக்கப்பட்ட 22 ஆசிரியர்களும் அதிபர்களும் அதிபர் சேவையில் பாதிக்கப்பட்ட 51
ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையுடன் இவ்வழக்குத் தாக்கலை செய்திருந்தனர்.
சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணைகள் கடந்த 24 ஆம் திகதியும் 26 ஆம் திகதி வெளியாகின. இதன்படி
அதிபர் சேவை ஐஐஐ இல் 82 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களில் 1233 பேருக்கு
நியமனங்கள் வழங்கவும் அதிபர் சேவை ஐஐ இல் மொத்தப் புள்ளி 212 இற்கு மேல் பெற்றவர்களுக்கு உடனடியாக நியமனங்கள்
வழங்குவதோடு மொத்தப் புள்ளி 113 இற்கும் மேல் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் இவ்அதிபர் சேவை ஐஐஐ இல் பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் தாக்கல்
செய்த வழக்கின் தீர்ப்பு 24 ஆம் திகதி வெளியாகியுள்ளது. உண்மையாகவே பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் இவ்வழக்கைத் தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அதிபர் சேவை யாப்பு விதிகளுக்கு மாறாக அரசாங்கம் செயற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு யாப்பினை
மீறி அரசாங்கம் செயற்படுகின்ற போது இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம். ஆசிரியர்கள்
பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றார்.