குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

கட்டுரைகள்


வெளிநாடு சென்ற இளம்பெண் மினோலி 

பெட்டியுடன் வராமல், பெட்டிக்குள் வந்தா


(பஹமுன அஸாம்)
கொஸ்கம தர்மகிராமய எனும் இடத்தில் வசித்துவந்த மினோலி. பார்ப்பவர் உள்ளங்களை கவர்ந்திழுக்கும் அழகைத் தன்னுள் கொண்டிருந்தார். ஆனால், அந்த அழகான உடல் இன்று மண்ணுக்குள் புதையுண்டு போய்விட்டன. கோபுரம்கட்டி வாழவேண்டும் என்ற ஆசைகள் மினோலிக்கு இருக்கவில்லை. என்றாலும் தமக்கென்று சிறியதாய் ஒரு வீட்டைக் கட்டி அன்புக் கணவனுடனும் செல்ல மகளுடனும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற கனவு மினோலிக்கு எந்நேரமும் இருந்தது.

ஆனால், இந்தக் கனவை நனவாக்கிக் கொள்ளும் அளவுக்கு மினோலியின் கணவன் செனரத்னவுக்கு ஒரு தொழில் இருக்கவில்லை. அப்பப்போது ஏதும் கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே செனரத்ன, மினோலி தம்பதியினர் தமது வாழ்க்கையை நடத்தினார்கள். இதற்கிடையில் அவர்களது இரத்தத்தில் இன்னொரு உயிரும் இணைந்து கொண்டது. இவ்வாறு அவர்கள் வறுமைக் கோட்டுக்குள் தட்டுத்தடுமாறி தமது வாழ்க்கையைக் கொண்டு சென்றாலும், அவர்களுக்குள் என்றும் கருத்து முரண்பாடுகளோ சண்டைகளோ வந்தது கிடையாது. இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து அன்பாகவே வாழ்ந்துவந்தார்கள்.

இதற்கிடையில், பொரளை வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் தரகராக வேலை பார்க்கும் கொஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்னொருவரைச் சந்திக்கிறார் மினொலி. ‘தங்கச்சி வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் எண்ணங்கள் ஏதும் இருக்கிறதா…? சொல்லுங்க. நல்ல இடம் இருக்கிறது. அனுப்பி வைக்கிறேன்’ என்றார். தனது குடும்ப சூழ்நிலை வரவர மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த மினோலியின் உள்ளத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் என்ன என்ற எண்ணம் தளிர் விடுகிறது.

‘எனக்குப் பரவாயில். ஆனால், செனரத் என்ன சொல்வாரோ தெரியல்ல’. ‘சரி…! நீங்க கேட்டுச் சொல்லுங்க.’ தனது குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், வெளிநாடு சென்றுதான் ஆகவேண்டும். அப்போது வீட்டையும் நல்ல படியாகக் கட்டி முடிக்கலாம். மகளையும் நல்லபடியாக படிக்க வைக்கலாம் என்று வெளிநாட்டுக்குச் செல்வதாக மினோலி தீர்மானம் எடுக்கிறார்.

‘செனரத்ன, நாங்க எப்போதுமே இப்படி இருக்முடியாது. அதனால வெளிநாடு செல்கிறேன்’ என்று மினோலி தனது எண்ணத்தை செனரத்திடம் சொல்கிறார். ‘உங்களுக்குப் பைத்தியமா? தெரியாத ஒரு நாட்டுக்குப்போய் நீங்க எப்படி இருப்பீங்க?’ என்று செனரத் மினோலியின் வெளிநாட்டுப் பயணத்தை மறுக்கிறார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். ஆரம்பத்தில் விடாப்பிடியாக இருந்த செனரத் மினோலியின் பேச்சுக்களால் இறுதியில் சம்மதிக்கிறார்.

இருவரும் பொரளையில் உள்ள முகவர் நிலையத் தரகர் பெண்ணிடத்தில் செல்கிறார்கள். ‘நல்ல இடமா? போனபிறகு ஏதும் பிரச்சினைகள் வருமா..?’ செனரத்ன துருவித்துருவி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது, மினோலியின்மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாகும். ‘நான் இதற்கு முன்னர் எத்தனை பேரை அனுப்பியிருக்கிறன். நீங்க ஒன்றுக்கும் பயப்படாதீங்க’ என்றார் அந்த தரகர் பெண்.

2011.03.07ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மினோலி நாட்டைவிட்டு வெளியேற ஆயத்தமாகின்றார். மினோலி, செனரத்ன இருவரது கண்களிலும் கண்ணீர் ததும்புகிறது. மினோலி மகளையும் கணவனையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுதான் அவர்களது கடைசி ஸ்பரிசங்கள் என்பது செனரத்துக்கோ மினோலிக்கோ தெரிந்திருக்காது. என்ன நடக்கப்போகிறது, அம்மா என்ன செய்யப்போகிறார் என்று விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர்களது செல்ல மகள் தாயையும் தந்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மினோலி தனது குடும்பத்தை விட்டுச் செல்கிறார். விமானம் வானை நோக்கிப் பறக்கிறது. மினோலியை வழியனுப்பும் குடும்பம், அது அவளை இறுதியாக வழியனுப்பும் பயணம் என்பதை அறிந்திருக்கவில்லை. மினோலி வெளிநாட்டுக்குச் சென்று சில நாட்களாகியும் எந்தத் தகலும் இல்லை. மினோலியின் அழைப்புக்காக காத்திருந்த செனரத்தின் நம்பிக்கை வீண்போகவில்லை. மினோலியிடம் இருந்து செனரத்துக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.

‘செனரத்ன நான் நல்லா இருக்கிறன். வந்திருப்பது நல்ல இடம் என்று விபரங்களைச் சொன்னார். மறுநாளில் இருந்து அடிக்கடி மினோலி செனரத்துக்கு அழைப்பெடுத்து குட்டி மகளின் நலன்களை விசாரித்துக்கொண்டார். இவ்வாறு பலநாள் நல்ல படியாக கதைத்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் திடீரென மினோலி செனரத்திடம் சொன்ன விடயம் செனரத்தைத் தூக்கிவாரிப்போட்டது.

‘செனரத்ன, இந்த இடம் சரியில்ல. என்ன கொடுமைப்படுத்துறாங்க. இதற்கு முன்னாள் வேலை செஞ்ச பெண்ணயும் இவங்க அடிச்சிக் கொலை செஞ்சிட்டாங்களாம். என்ன எப்படியாவது இலங்கைக்கு திருப்பி எடுங்க என்றார்.’ மறுநாள் செனரத்ன பொரளையில் உள்ள முகவர் நிலையத்துக்கு சென்று விடயத்தைக் கூறுகிறார். ஆனால், அவர்கள் அதைக்கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. பல தடவைகள் முகவர் நிலையத்துக்குச் சென்றபோதும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

மினோலிக்கு ஏற்பட்டுள்ள நிலைகுறித்து அவரை இலங்கைக்கு திருப்பி எடுக்கும் வரையில் செனரத்ன மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினரும் நிம்மதியில்லாமல் இருந்தார்கள். இதற்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி 7.30 மணியளவில் வெளிநாட்டிலிருந்து செனரத்துக்கு ஒரு அழைப்பு வருகிறது. அது ‘மினோலியை நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார்கள்’ என்பதாகும்.

செனரத்துக்கு உலகமே இருண்டதுபோல் இருந்தது. ஒன்றுமே அறியாத அந்த பிஞ்சு உள்ளத்துக்கான தாய்ப்பாசம் இனி ஏது?விடயத்தைக் கேள்விப்பட்ட அழுவதைத்தவிர, ஏழைகளுக்கு வேறு என்ன மிச்சம் இருக்கிறது? வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் மினோலி வெளிநாடு சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியபோதும், சம்பந்தப்பட்ட அமைச்சின் தலையீட்டால் மினோலியின் சடலம் கடந்த மாதம் 29ஆம் திகதி சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

மினோலியை வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பது சுற்றுலாப் பயண விசாவில். அவருக்கு காப்புறுதி செய்யப்பட்டிருக்கவும் இல்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும்போது செய்யவேண்டிய சட்டரீதியான சில நடவடிக்கைகளுக்கு மாற்றமாக மினோலியை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நபர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதனால் மினோலியின் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை.

இருப்பினும், இனி இப்படியான ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்படாமலாவது இருப்பதற்கு இது பாடமாக இருக்கவேண்டும். மினோலியின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கொஸ்கமுவ பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 4 மணிநேரம் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடும்பக் கஷ்டத்துக்காக வெளிநாடு சென்ற மினோலி கடைசியில் பெட்டியில் பிணமாகத்தான் வீடு திரும்பினார். வெளிநாடு செல்லும் நமது சகோதரிகளுக்கும் இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்.



கொள்ளுப்பிட்டி ஹோட்டல் தேனிலவு 

கொலைகாரன் சிக்கியது எப்படி




(பஹமுன அஸாம்)
கொள்ளுப்பிட்டியில் நடந்த கொலைச் சம்பவத்தை அநேகர் அறிந்திருப்பர். திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்த சுதர்ஷனி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். சுதர்ஷனி ஷகிலா கனகசபை இரு பிள்ளைகளின் தாயாவார். தனது முதலாவது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றிருந்த சுதர்ஷனி இரண்டாவது திருமண பந்தத்தில் இணைவதற்காகவே இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகின்றார். தனது தாயாருடன் இலங்கைக்கு வரும் சுதர்ஷனி கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்குகிறார். ஜனவரி மாதம் 14ஆம் திகதி ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்யும் சுதர்ஷனி தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் சின்னதுறை ஞானச் சந்திரனையும் தன்னுடன் ஹோட்டலில் தங்கவைக்கிறார்.

சுதர்ஷனி, சின்னதுறை ஆகிய இருவரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள விவாகப் பதிவாளரிடம் சென்று தமது குடும்ப வாழ்க்கையை சட்டபூர்வமாகப் பதிவு செய்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இணைந்த அவர்கள், 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த அறையை மாற்றி வேறு ஒரு அறைக்குச் செல்கிறார்கள். அத்தோடு அதுவரையில் அவர்களுடன் இருந் சுதர்ஷனியின் தாய் புதுத்தம்பதியினரை தனியாக இருக்க இடம் கொடுத்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்குச் செல்கிறார். இதற்கிடையில் 23ஆம் திகதி சுதர்ஷனியால் ஹொட்டலின் பில்லும் கட்டப்படுகிறது. பெப்ரவரி 25ஆம் திகதியில் இருந்து சுதர்ஷியின் அறைக் கதவில் “Do Not Disturb” என்ற “டக்” தொங்கவிடப்படுகிறது.


அறையை சுத்தம் செய்து இரண்டு நாட்களாகிறது என்பதால் ஹோட்டல் சேவையாளர் ஒருவர் கதவைத் தட்டி அறையை சுத்தம் செய்யவா என்று கெட்டடுள்ளார். கதவை சிறிது திறந்த ஞானச்சந்திரன் சின்னதுறை தலையை மாத்திரம் வெளியே போட்டு “இப்போதைக்கு வேண்டாம்” என்று சொல்லி விட்டு மீண்டும் கதவை முடியிருக்கிறார். அத்தோடு அவர்கள் அன்று இரவு மதுபானமும் வரவழைத்துக் குடித்துள்ளார்கள். 26ஆம் திகதி காலையிலும் காலை உணவு மதுபானம் என்பவற்றை அறைக்கு வரவழைத்துள்ளார்கள். பின்னர், அந்த அறையில் அவர்கள் பற்றி எந்த சலனமும் இருக்கவில்லை. ஏனைய நாட்களில் சுதர்ஷனி, சின்னதுறை ஜோடி வெளியே போய் வந்தலும் 25ஆம் திகதிக்குப் பின்னர் அவர்கள் எங்கும் வெளியே போய் வருவதை யாரும் அவதானிக்கவில்லை.

28ஆம் திகதி காலையும் உதயமாகியது. ஆன்றும் சுதர்ஷனியின் அறையில் எந்த சத்தமும் இல்லை. அன்றைய தினம் ஹோட்டல் சேவையாளர் அவ்வறையின் அருகால் செல்லும்போது அவர்களுக்கு வித்தியாசமான ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்கள். அவர்கள் உடனே ஹோட்டல் நிர்வாகத்துக்கு இதை அறிவிக்கிறார்கள். ஹோட்டல் நிர்வாகத்தினர் வந்து கதவைத் தட்டியும் அறையில் இருந்து எந்த பதிலும் இல்லாததால், ஹோட்டல் நிர்வாகத்திடம் உள்ள மேலதிக சாவியால் அந்த அறைக் கதவைத் திறக்கிறார்கள். அங்கு அவர்களுக்குக் காணக்கிடைத்தது கட்டிலின் மேல் கிடந்த சுதர்ஷனியின் நிர்வாண உடலை மாத்திரம்தான். உடனே பொலிஸாருக்கு அறிவிக்கப்படுகிறது.

கட்டிலின் மேல் தலை மாத்திரம் தெரியும் விதத்தில் வெள்ளைப் போர்வையொன்றால் மூடியிருந்த சுதர்ஷனியின் நிர்வாண உடலை சோதனையிட்ட பொலிஸாருக்கு சுதர்ஷனி கழுத்தில் கூறிய கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஊகிக்க வெகுநேரம் எடுக்கவில்லை. அறையை நன்றாக மோப்பமிட்ட பொலிஸாருக்கு சுதர்ஷனி, சின்னதுறை தம்பதியின் விவாகப் பதிவுச் சான்றிதலும் தமிழில் எழுதிய சில கடிதங்களும் கிடைக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் அவ்வறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அது சுதர்ஷனியின் உறவினர் ஒருவராகும். “சில நாட்களாக சுதர்ஷனியின் மொபைல் போனுக்கு அழைப்பெடுத்தேன். எந்த பதிலும் இல்ல அதனால்தான் ஹோட்டல் நம்பருக்கு எடுத்தோம்” என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.



கொலைகாரனுக்கு நீண்டநாள் மறைந்திருக்க முடியாது. பரபரப்பாக செயற்பட ஆரம்பித்த கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கொலைகாரனை கண்டுபிடிக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சுதர்ஷினியின் உறவினர் முலம் பெற்றுக் கொண்ட தகவலினாலும், விவாகப் பதிவாளரிடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் மூலமும் சுதர்ஷனியின் கனவுனான சின்னதுறைதான் அவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகித்தனர். அதற்கு முக்கிய காரணம் சின்னதுறை ஹோட்டலில் அறையைப் பெற்றுக் கொள்ளும்போது வழங்கியிருந்த முகவரியும் விவாகப் பதிவில் வழங்கியிருந்த முகவரியும் வெவ்வேறானவையாகும்.

அத்தோடு 26ஆம் திகதி ஹோட்டலை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் ஹோட்டலுக்கு வரவில்லை, மேலும் அவரது கையடக்கத் தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. உஷாரடைந்த போலிஸார் கையடக்க தெலை தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கனின் உதவியோடு சின்னதுறையின் கையடக்க தொலைபேசியை கண்காணிக்க ஆரம்பித்தனர். எந்நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னதுறையின் தொலைபேசி சிலநேரங்களில் “ஒன்” செய்யப்பட்டது. “ஒன்” செய்த அனைத்து நேரங்களிலும் கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் இருந்தே சமிஞ்ஞை சென்றது. இதன் மூலம் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பகுதியிலேயே உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் இரகசியப் பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு ஹோட்டல் பாதுகாப்புக் கெமராவில் பதிவாகியிருந்த சின்னதுறையின் புகைப்படங்கள் மிகவும் உதவியாக இருந்தன. சில நாட்களில் ஒரு வைத்தியசாலை அருகில் இருந்து சந்தேக நபர் கைது செய்யப்படுகிறார். அத்தோடு சுதர்ஷனியின் கொலைக்கான மர்மமும் அம்பலமாகிறது. சந்தேகநபர் ஏற்கனவே திருமணம் செய்தவர். இந்தியாவில் தனது மனைவி பிள்ளைகள் மூவருடனும் வாழ்ந்து வந்தவராவார். வீட்டருகில் இருந்த எரிவாயு நிலையம் ஒன்று திடீரென்று வெடித்ததில் தனது முதலாவது மனைவியையும் பிள்ளைகளையும் சந்தேக நபர் பறிகொடுத்திருந்தார்.



கொலையுண்ட சுதர்ஷனியும் ஏற்கனவே திருமணமானவராவார். கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றிருந்த அவர் தனது இரு பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வந்தார். முதல் கணவனிடம் இருந்து விவாகரத்துப்பெற்ற பின்னர் பழைய சிநேகிதனான சின்னதுறையுடன் இருந்த நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதற்காக சுதர்ஷனி தனது தாயுடன் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகிறார். கடந்த ஜனவரி 14ஆம் திகதி சின்னதுறையின் பெயரிலேயே அறை பதியப்படுகிறது. இருவரின் விருப்பத்தோடு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சுதர்ஷனி இங்கிலாந்தில் வாழ்வதற்கே அதிகம் ஆசைப்பட்டார். அதனால் அடிக்கடி சின்னதுறையை இங்கிலாந்துக்குச் செல்லக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

தனது வியாபாரத்தை நிறுத்திவிட்டு உடனடியாக வரமுடியாது எனவும் “சிறிது நாட்கள் செல்லட்டும். இவற்றையெல்லாம் ஒரு நிலைப்படுத்திவிட்டு போவேம் அல்லது நீங்க முன்னாடி போங்க நான் இவற்றையெல்லாம் முடித்துவிட்டு ஒரு மாத்தில் வந்து விடுகிறேன்” என்றுள்ளார். இருந்தாலும் சுதர்ஷனி இங்குலாந்துக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி நச்சரித்ததால் இருவருக்கிடையிலும் அடிக்கடி சண்டைகள் எழுந்தன. இந்த சண்டைகளின் இறுதிநாள் தான் அவர்கள் திருமணம் முடித்து குடும்பம் நடத்திய 7ஆவது நாள். அதாவது பெப்ரவரி 26ஆம் திகதியாகும்.

காலை உணவேடு மதுபானமும் அருந்தியதால் போதையில் இருந்த அவர்களுக்கிடையில் மீண்டும் இங்கிலாந்து செல்லுவது பற்றிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. சின்னதுறையின் கோபம் எல்லை மீறியதனால் அறையில் அப்பிள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தி சுதர்ஷனியின் கழுத்தை பதம்பார்க்கிறது. சுதர்ஷனியை கட்டிலில் தள்ளிவிட்டு அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக்கொண்டு அவரது கழுத்தில் குத்தியுள்ளார் சந்தேக நபர். உயிர்பிரிந்த சுதர்ஷனியை கட்டிலில் விழுந்து கிடக்க கட்டில் போர்வையை அவரின் மேல் விரித்துவிட்டு அறையை விட்டு வெளியேருகிறார் சந்தேக நபர். திட்டமிட்டு செய்யாத கொலை என்பதால் சந்தேக நபரால் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருக்க முடியாமல் போய்விட்டது. சுந்தேக நபர் அறையில் விட்டுச் சென்றிருந்த ஆதாரங்களும், அவரது கையடக்கத் தொலைபேசியும் சந்தேக நபரை பொலிஸாரின் வலையில் சிக்கவைத்தது.

No comments:

Post a Comment