குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, November 4, 2011

கிறீன்விச் நேரம் மாறப்போகின்றது


சர்வதேச நேரக் கணிப்பீடாக கடந்த 120 ஆண்டுகளாக இருந்துவரும் கிறீன்விச் நேரக்கணக்கு குறித்து மாற்றம் ஒன்றை கொண்டு வரக்கூடிய பிரேரரண பற்றி விவாதிக்க உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பிரித்தானியாவில் ஒன்று கூடுகின்றனர். இம்மாநாட்டின் முடிவு கிறீன்விச் நேரக்கணக்கு வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பாக போய்விடும் என்று கருதப்படுகின்றது.

120 வருடங்களாக சர்வதேச நேரக்கணக்கீடாக கிறீன்விச் நேரம் மதிக்கப்பட்டு வருகின்றது. கிறீன்விச் நேரக்கணக்கீடு பூமியின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்படவில்லை என்றும் அதன் கணக்கீடு அணுச்சக்தி மணிக்கூடுகளைக் கொண்டே கிறின்விச் நேரம் கணக்கிடப்படுவதாகவும் புதிய கருத்து உருவாகியுள்ளது.

அதனால் கிறீன்விச் நேரக்கணக்கிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நடவடிக்கையை எடுப்பது பற்றி ஜனவரியில் கூடி முடிவு செய்வதற்காக சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் ஜெனிவாவில் கூட இருக்கின்றது. கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நேரத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

No comments:

Post a Comment