பஹமுன அஸாம்
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பாரியளவில் வீழ்ச்சியடைந்தள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய வீழ்ச்சியானது பொது மக்கள் மனதில் ஒரு மகிழ்வை எற்படுத்தினாலும் வியாபாரிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கக்கூடும். 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 55ஆயிரம் ரீபா வரை விற்கப்பட்ட 22 கரட் தங்கம் 42 ஆயிரம் ரூபா தொடக்கம் 43 ஆயிரம் ரூபா வரை குறைவடைந்துள்ளது.
2004 ஆம் ஆண்டுவரை சீராக இருந்து வந்த தங்கத்தின் விலை 2004 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்தே சென்றது. இந்த அதிகரிப்பானது இவ்வருடம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டில் தங்கத்தின் விலை 6 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இவ்வாறு தங்கத்தின் இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் உலக சந்தையில் தங்கத்தின் நிரம்பல் அதிகமானதேயாகும். சைப்ரஸ் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தனது இருப்பில் இருந்த 10 தொன் தங்கத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் பெறுமதி சு
மார் 400 மில்லியன் யூரோக்களாகும். இந்த 10 தொன் தங்கம் உலக சந்தைக்கு வந்தமையே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மேலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிடலாம். பங்குச் சந்தை வணிகர்கள் தங்கத்தை கைவிட்டு விட்டு மீண்டும் பங்குப் பத்திரங்களை வாங்க தொடங்கியுள்ளமையும் ஒரு காரணமாகும்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச்சரிவு இலங்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணனைக் கேட்ட போது “தங்கத்துக்கு ஒரு நிலையான விலை இருக்காது. அது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் குறைந்திருக்கும் மறு நாள் அதிகரிக்கும். அமெரிக்காவின் கையில தான் தங்க வர்த்தகம் தங்கியுள்ளது. விலை குறைஞ்சது கொஞ்சம் சந்தோசம் தான். வியாபாரமும்
முன்னரை விட கொஞ்சம் நல்லாவே இருக்குது.
அவரிடம் இந்த விலைக்குறைவானது உங்களுக்குப் பாதிப்பில்லையா? என்று கேட்டபோது; பாதிப்பு என்று சொல்வதை விட விலை கூட இருந்த போது நல்ல இலாபத்துக்கு நகைகளை வித்தோம். நல்ல வருமானமும் இருந்தது. நாங்க அவ்வப்போது தங்கத்தை எடுத்து நகை செய்து விக்கிறம். அதால விலைத்தலம்பல் பெரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது. அண்மையில ஒரு தனியார் வங்கி இந்த விலைச்சரிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு என்னை
அழைத்திருந்தது. அதில இன்றைய நிலவரப்படி ஒரு விலையைக் கேட்டாங்க. நானும் மதிப்பிட்டு 36 ஆயிரம் ரூபா என்று சொன்னன். அந்த வங்கியின் மூலதன விலையின்படி வட்டியோடு 43 ஆயிரம் ரூபா முடியுது. அதன்படி
அவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா நட்டம். அத்தோட இன்று தங்கம் என்றது நம்ம கலாச்சாரம் ஆகிவிட்டது. ஒரு கலியாணத்தின் போது கட்டாயம் தங்கத்துல தாலி செய்வாங்க. ஏனைய நகைகள் போடுவாங்க. சாதாரண மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம். என்னப் பொறுத்தவரையில இன்னும் விலை குறையவேண்டும் என்று தான் நினைக்கிறன்.’ என்று தனது கருத்துக்களைச் சொன்னார்.
அவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா நட்டம். அத்தோட இன்று தங்கம் என்றது நம்ம கலாச்சாரம் ஆகிவிட்டது. ஒரு கலியாணத்தின் போது கட்டாயம் தங்கத்துல தாலி செய்வாங்க. ஏனைய நகைகள் போடுவாங்க. சாதாரண மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம். என்னப் பொறுத்தவரையில இன்னும் விலை குறையவேண்டும் என்று தான் நினைக்கிறன்.’ என்று தனது கருத்துக்களைச் சொன்னார்.

அடுத்தது இந்த நகை வியாபரத்தில் என்னைக்குமே ஒரு நிரந்தரமான விலை இருக்காது. ஒரு தளம்பல் எப்போதுமே இருக்கும். ஒரு நாள் கூடும் ஒரு நாள் குறையும். இது வந்து மிகவும் ஒரு இக்கட்டான நிலமையா இருக்கும். ஒரு வாடிக்கையாளர் வந்து அன்று உள்ள விலையின்படி நகை செய்யக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் ஒரு ஐந்து நாள் கழித்து வரும் போது விலை குறைந்திருந்தால் அவர் அந்த குறைந்த விலைக்கு கேட்பார். விலை கூடியிருந்தால் அது பற்றி ஒண்ணுமே கதைக்க மாட்டார். நாங்க முதல்லயே ஓடர் பண்ணிட்டோம் தானே எங்களுக்கு அந்த விலைக்குத் தான் தர வேண்டும் என்று தர்க்கம் புரிவார்கள்’ என்று பரபரப்பான வியாபார நேரத்திலும் தான் பல வருட அனுபவசாலி என்பதை நிரூபித்துக் காட்டுவது போல தனது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார் ஆனந்தன் என்ற தங்க நகை வர்த்தகர்.


எமது வங்கியைப் பொறுத்தவரையில் கடந்த 5 அல்லது 6 வருடங்களாகத் தான் அடகுநடவடிக்கையை மேற்கொள்கிறது. ஆனால் நகை அடகு வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் வேறு சில வங்கிகள் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளன. அடுத்தது இன்றை விலை வீழ்ச்சிக்கு சைப்பிரஸ் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சைப்பிரஸ் அரசு தன்னிடம் இருந்த தங்கத்தை சந்தையில் விட்டது போன்று அமெரிக்க மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளும் தம்மிடம் உள்ள தங்கத்தை சந்தையில் விடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தாலும் அதனை உறுதியாகச் சொல்லமுடியாது. அவ்வாறு நடந்தால் தங்கத்தின் விலையில் இன்னும் பாரிய வீழ்ச்சி நிச்சயமாக ஏற்படும்.’ என்று அலுவலக வேலைகளுக்கு மத்தியிலும் தனது கருத்தைச் சொன்னார்.
எது எப்படியோ இந்த விலைச்சரிவானது நிரந்தரமானதா இல்லையா என்பது உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்றாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியளவில் ஏற்பட்ட விலைச்சரிவில் தற்போது படிப்படியான ஒர் ஏற்றத்தையே காணமுடிகிறது. 56 ஆயிரத்தில் இருந்து 44ஆயிரத்து 500 வரை குறைந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி 48 ஆயிரமாக காணப்படுகிறது. சில வியாபாரிகளின் கருத்தாக அமைவது இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தாண்டும் என்பதாகும்.
தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் மத்திய வங்கி தங்கத்தை இருப்பில் வைத்திருக்கும். அவ்வாறு இருப்பில் வைத்துள்ள தங்கத்தின் பெறுமதிக்கு ஏற்பவே அந்த நாட்டின் அரசாங்க செலாவணி நாணயம்வெளியிடப்படுகிறது.
சைப்பிரஸ் தன்னிடம் உள்ள முழுத் தங்கத்தையும் விற்பனை செய்யவில்லை. 10 தொன்களை மாத்திரமே சந்தையில் விட்டது. இதன்படி பார்த்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சியானது நீண்ட நாட்களுக்கு இருக்காது. இருப்பினும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள மேலும் ஒரு சில நாடுகள் தம்மிடம் இருப்பில் உள்ள தங்கத்தை சந்தையில்விடவுள்ளதாக ஒரு கருத்தும் கசிகிறது. இவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சி மேலும் தொடரலாம் என்று உறுதியாக நம்பலாம்.
No comments:
Post a Comment